
ஐஎஸ்எல் போட்டியில் 2ஆவது
அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டம், சென்னையின் எஃப்சி-அட்லெடிகோ டி
கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.
தில்லி டைனமோஸ் எஃப்சிக்கு எதிராக நேற்று நடைபெற்ற
ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிச்
சுற்றுக்கு முன்னேறியது எஃப்சி கோவா அணி. தில்லியை 2 கோல் வித்தியாசத்தில்
தோற்கடித்தாலொழிய இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற இக்கட்டான
சூழலில் களமிறங்கிய கோவா, அட்டகாசமாக ஆடி வென்றது. நேற்றைய ஆட்டத்தை டிரா
செய்தாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய
தில்லி அணியின் கனவு நிறைவேறாமல் போனது.
முன்னதாக, புணேவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி
ஆட்டத்தின் முதல் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வென்றது
சென்னை அணி. இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தின் 2ஆவது சுற்றில் 4
கோல்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தினால் தான் கொல்கத்தாவுக்கு
இறுதிச் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
சென்னை டிரா செய்தாலே இறுதிச்சுற்றை உறுதி
செய்துவிடும். கொல்கத்தா 4-1 என்ற கணக்கில் வென்றால்கூட, கொல்கத்தாவில்
கோல் அடித்ததன் அடிப்படையில் சென்னை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 7.00 மணி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
No comments:
Post a Comment