133 ரன்களில் சுருண்டது இலங்கை: வெற்றியை நெருங்கிய நியூஸிலாந்து
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி, 133 ரன்களில் சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டுனெடினில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை 292 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி, 2-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 78.4 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், அடுத்த 6 பந்துகளில் நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 79.4 ஓவர்களில் அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 237 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர், 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணிக்கு திமித் கருணரத்னேவும், கௌஷல் மெண்டிஸும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தந்தனர். 23-ஆவது ஓவரில், அதாவது இலங்கை அணி 71 ரன்களை எட்டியிருந்தபோது, பிரேஸ்வல் இந்த கூட்டணியை உடைத்தார்.
கருணரத்னே 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் அடித்த பந்தை டிம் சௌதி கேட்ச் செய்தார். இதன் பின்னர், இலங்கை அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அடுத்த 62 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணியின் 2-ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
36.3-ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 133 ரன்களில் சுருண்டது. எதிரணி தரப்பில் சௌதி 4 விக்கெட்டுகளையும், வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றியை நெங்கிய நியூஸிலாந்து: இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்ஸன் 78 ரன்களுடனும் (120 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), பி.ஜே.வாட்லிங் ரன்கணக்கை துவங்காமலும் களத்தில் உள்ளனர். 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற நியூஸிலாந்து அணிக்கு இன்னும் 47 ரன்களே தேவை.
இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், 1987-91 காலகட்டத்தில் தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற சாதனையை நியூஸிலாந்து அணி, மீண்டும் சமன்செய்யும்.

No comments:
Post a Comment