பழைய திறமையை மீண்டும் வெளிப்படுத்துவேன்-யுவராஜ் சிங் - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, December 20, 2015

பழைய திறமையை மீண்டும் வெளிப்படுத்துவேன்-யுவராஜ் சிங்

பழைய திறமையை மீண்டும் வெளிப்படுத்துவேன்-யுவராஜ் சிங்


இந்திய டி-20 கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கும் யுவராஜ் சிங், தனது பழைய திறமையை மீண்டும் வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
 இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்குக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி-20 அணியில் மீண்டும் இடம் கிடைத்திருக்கிறது. அவர், கடைசியாக இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.
 அந்தப் போட்டியில் இந்திய அணி, தோல்வியைத் தழுவியது. யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தார். இதன் பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அவர், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடி வந்தார். 
 இந்நிலையில் யுவராஜ், ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் 398 ரன்களும், விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஆட்டங்களில் 341 ரன்களும் எடுத்துள்ளார். இதன் சராசரி 85.25 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 103.64 ஆகும். இது, தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க, யுவராஜ் தற்போது மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியிருக்கிறார்.
 மோசமான காலகட்டம்: இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
 எனது வாழ்க்கையில் நான் கடந்துவந்த மோசமான காலகட்டம், என்னை வலிமையானவனாக மாற்றியுள்ளது. மீண்டும் அணிக்கு திரும்புவதில் நெருக்கடி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போதுமே நெருக்கடி இருக்கும். ரசிகர்கள் எப்போதுமே நமது பழைய திறமையை எதிர்பார்ப்பார்கள். தேர்வுக் குழுவினர், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு எனது திறமையை உரிய நேரத்தில் மீண்டும் வெளிப்படுத்துவேன்.
 ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். இந்த சூழலில் நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டு, உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது என்பது கடினமானதாகும். ஆனால், முன்னேறுவதற்கு வேறு வழியில்லை. உள்ளூர் போட்டிகளில் நான் சிறப்பாகவே விளையாடி வருகிறேன். ரசிகர்களுக்கு நன்றி: கஷ்டமான காலங்களில் எனக்கு ஆறுதலாக இருந்த எனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஆலோசகர் மற்றும் சமூக வலைதளங்களில் எனக்கு உத்வேகம் அளித்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் யுவராஜ்சிங்.
 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற யுவராஜ் சிங், அதன் பிறகு புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages