328 ரன் சேஸிங்கை துரத்திய அசாம்: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் ஒரு ரன்னில் வெற்றி - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

328 ரன் சேஸிங்கை துரத்திய அசாம்: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் ஒரு ரன்னில் வெற்றி

328 ரன் சேஸிங்கை துரத்திய அசாம்: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் ஒரு ரன்னில் வெற்றிஇந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி என்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் பஞ்சாப்- அசாம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஜவான்ஜோத் சிங் 32 ரன்னும், பர்காத் சிங் 69 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து வந்த மந்தீப் சிங் 97 பந்தில் 117 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த ஆல்ரவுண்டரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடும்லெவனில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த குர்கீரத் சிங் 36 பந்தில் 62 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.

பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அசாம் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீர் தாஸ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் பர்கயாஸ்தா சிறப்பாக விளையாடி 112 ரன்னில் 125 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த அருண் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அமித் வெர்மா 67 பந்தில் 71 ரன்களும், ஷர்மா 55 பநதில் 60 ரன்களும் எடுக்க அசாம் அணி 328 ரன்கள் என் வெற்றி இலக்கை நெருங்கி கொண்டிருந்தது.

அசாம் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் டை, இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அமித் ஷிங்கா ரன் அவுட் ஆக, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு, சர்வீசஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், உத்தர பிரதேசம் அணியை மத்திய பிரதேசமும், ஜம்மு- காஷ்மீர் அணியை கேரளாவும், ஐதராபாத் அணியை ராஜஸ்தானும், சவுராஷ்டிராவை இமாச்சல பிரதேசமும் வீழ்த்தியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages