டோனி டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் விராட் கோலி
டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து இந்தியா அணியை
சிறந்த நிலைமைக்கு கொண்டு வருவதற்காக தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக
பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் போட்டி என்று கூறும் விராட் கோலி, பந்து வீச்சின் மூலம் எதிரணியின் 20 விக்கெட்டையும் வீழ்த்த வேண்டும். அதற்காக பந்து வீச்சு துறையில் ஐந்து வீரர்களுடன் களம் இறங்க முடிவு செய்தார்.
அதன்பிறகு டெஸ்ட் போட்டிக்கு முக்கியமானது கேட்ச். எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆடும்போது அவர் கொடுக்கும் கேட்ச் வாய்ப்பை இழந்துவிட்டால் டெஸ்ட் நமது கையை விட்டு விலகிவிடும்.
இதனால் பீல்டிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் பயிற்சியின்போது ஒவ்வாரு வீரரும் கூடுதலாக 20 நிமிடம் பீல்டிங் (கேட்ச்) பயிற்சிக்காக கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விராட் கோலி விரும்புகிறார் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் மேலும் கூறுகையில் ‘‘வீரர்கள் பீல்டிங் குறித்த மனநிலையில் இருந்து மாற வேண்டும். சிறந்த பீல்டிங்கால் நம்மால் சிறந்த பங்களிப்பை அணிக்காக உருவாக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கை போல் பீல்டிங்குக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
இலங்கை தொடருக்கு முன்னால் ஒவ்வொரு வீரரும் வழக்கான பயிற்சியின்போது கூடுலாக 20 நிமிடங்கள் கேட்ச் பிடிப்பதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோலி விரும்பினார். இந்த உந்துதல் தற்போது நிரூபணம் ஆகி வருகிறது. வீரர்கள் 20 நிமிடத்திற்குமேல் பயிற்சி செய்வதால், தற்போது அதன் விளைவை நாம் பார்க்கிறோம்.
ரகானே ஸ்லிப் திசையில் அபாரமாக பீல்டிங் செய்து வருகிறார். அதேபோல் புஜாரா, ரோகித் சர்மா, முரளி விஜய், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பீல்டிங் செய்கின்றனர். அதேபோல் பவுண்டரி கோட்டருகே இசாந்த் சர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாக பீல்டிங் செய்கிறார்கள்’’ என்றார்.

No comments:
Post a Comment