எந்த அணியில் டோனி, ரகானே, ரெய்னா, மெக்கல்லம், ஸ்மித்? - நாளை தெரியும் - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

எந்த அணியில் டோனி, ரகானே, ரெய்னா, மெக்கல்லம், ஸ்மித்? - நாளை தெரியும்

எந்த அணியில் டோனி, ரகானே, ரெய்னா, மெக்கல்லம், ஸ்மித்? - நாளை தெரியும்2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனடிப்படையில் இரு அணிகளுக்கும் தலா இரண்டு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் அந்த இரண்டு அணிகளுக்கும் பதிலாக புனே, ராஜ்கோட் ஆகிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏலம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியில் உள்ள 10 பேரை இந்த இரண்டு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளலாம். இதற்கான நடைமுறை நாளை மும்பையில் உள்ள மும்பை கிரிக்கெட் வாரியத்தின் பொழுதுபோக்கு மையத்தில் நடக்கிறது.

இந்த நடைமுறை நிகழ்ச்சியின்போது புனே, ராஜ்கோட் அணிகள் எந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ளப்போகிறது என்பதுதான் தற்போதைய பெரிய செய்தியாக உள்ளது. இரண்டு அணிகளும் தலா ஐந்து நபர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இரண்டு அணிகளிலும் டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராண்டன் மெக்கல்லம், வெயின் பிராவோ, டு பிளிசிஸ், ரகானே, வாட்சன், ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இந்த நடைமுறையில் முதல் வீரரை தக்கவைத்துக்கொள்ள முடிவு எடுக்கும் உரிமை புனே அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணி டோனியை முதல் நபராக தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி தக்கவைத்துக் கொண்டால் வீரர்களை ஏலம் எடுக்க தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் 66 கோடி ரூபாய் சலுகையில் 12.5 கோடி குறைந்து விடும்.

அடுத்த நபராக தன்னுடைய முதல் வீரராக ராஜ்கோட் அணி ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டால் அவருக்காக ரூ. 12.5 கோடியை ராஜ்கோட் அணி இழக்கும்.

இந்த இரண்டு அணிகளும் தற்போதைய சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா ஐந்து நபர்களை தக்கவைத்துக்கொண்டால் சுமார் 39 கோடியை தனது ஏலத் தொகையில் இருந்து இழக்க நேரிடும். பின்னர் பிப்ரவரி மாதம் நடக்கும் பொது ஏலத்தில் மீதமுள்ள ரூ. 25 கோடியில்தான் மற்ற வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் இரண்டு அணிகளும் 39 கோடி ரூபாய்க்கு ஐந்து வீரர்களையும் தக்க வைத்துக்கொள்ளுமா? என்பது நாளை தெரியும்.

இதற்கிடையே தற்போதுள்ள ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை வெளியேற்றுவது, அணிகளுக்கிடையே வீரர்கள் மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages