த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில்
வெற்றி பெற்ற சென்னை அணி:
மக்களுக்கு சமர்ப்பிக்கும்
அபிஷேக்பச்சன்
ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற சென்னை அணி:
மக்களுக்கு சமர்ப்பிக்கும்
அபிஷேக்பச்சன்
ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார்.
2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் சென்னை அணியினர் கிண்ணத்தை வென்றனர்.
இந்த வெற்றி குறித்து அபிஷேக்பச்சன் கூறியதாவது, வெள்ளதால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம், சிறப்பாக விளையாடுவோம் என்று எங்கள் அணி தெரிவித்து இருந்தது.
அதன்படி , த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் கோவாவை தோற்கடித்து ஐஎஸ்எல் கிண்ணத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த வெற்றியையும், கிண்ணத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போராட்ட குணம் கொண்ட சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.
மேலும், இந்த போட்டிக்கு ஆதரவு அளித்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment