அசத்தினார் ரோஜர் பெடரர் வென்றது யூஏஇ ராயல்ஸ்
சிங்கப்பூர்: ஐபிடிஎல் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஜப்பான் வாரியர்ஸ், யூஏஇ ராயல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.ஐபிடிஎல் டென்னிஸ் தொடரின் ஐந்தாம் கட்ட ஆட்டங்கள் சிங்கப்பூரில் நேற்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் ஜப்பான் வாரியர்ஸ் அணி 29-15 என்ற கேம் கணக்கில் பிலிப்பைன்ஸ் மாவெரிக்ஸ் அணியை வென்றது. லெஜண்ட்ஸ் சிங்கிள்ஸ் பிரிவில் ஜப்பான் வாரியர்ஸ் அணியின் மாரட் சபீன் 6-3 என்ற கேம் கணக்கில் ஜேம்ஸ் பிளேக்கை வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் அணியின் பியரே ஹியூஸ் ஹெர்பர்ட் 6-3 என்ற கேம் கணக்கில் இவா கார்லோவிக்கை வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை குரூமி நாரா 6-1 என்ற கேம் கணக்கில் ஜார்மிலாவை வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜப்பான் அணி சார்பில் ஆடும் இந்திய வீரர் லியாண்டர் பயஸ்-பியரே ஹியூஸ் ஜோடி, பிலிப்பைன்ஸ் ஜோடியிடம் 6-5 என டை பிரேக்கரில் தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் யூஏஇ ராயல்ஸ் அணி, சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் அணியை வென்றது. யூஏஇ அணியின் ரோஜர் பெடரர், ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் களமிறங்கி கலக்கினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் யூஏஇ அணியின் ரோஜர் பெடரர் 6-4 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூரின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் யூஏஇ ராயல்ஸ் அணியின் கிரிஸ்டினா மடனோவிக் 6-5 என டை பிரேக்கரில் சிங்கப்பூர் அணியின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையரில் ரோஜர் பெடரர் ஜோடி 6-4 என்ற கேமில் வாவ்ரிங்கா ஜோடியை வீழ்த்தியது. கலப்பு இரட்டையரில் ரோஜர் பெடரர்-மடனோவிக் ஜோடி 3-6 என்ற கேமில் சிங்கப்பூரின் டஸ்டின் பிரவுன், கரோலினா பிளிஸ்கோவா ஜோடியிடம் தோல்வி கண்டது. ஆனால், மொத்த கேம் அடிப்படையில் 27-23 என்ற கேம்களில் யூஏஇ ராயல்ஸ் அணி சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது.

No comments:
Post a Comment