அறக்கட்டளை ஓட்டப்பந்தயம் 2 கி.மீ.க்கு மேல் ஓட முடியாமல் செரீனா வில்லியம்ஸ் திணறல்
புளோரிடா: டென்னிஸ் விளையாட்டு உலகில் இந்த ஆண்டு முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டத்தை வென்ற செரீனா, அமெரிக்க ஓபனில் நூலிழையில் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 2016ம் ஆண்டில் நான்கு பட்டங்களையும் வென்று ‘செரீனா ஸ்லாமை’ நிறைவு செய்யும் முனைப்பில் உள்ளாராம் அவர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்க குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு கல்வி கிடைக்கவும் உதவும் வகையில் அவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு நிதி திரட்ட 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தை செரீனா நடத்தினார். ‘செரீனா வில்லியம்ஸ் அல்டிமேட் ரன்’ என்ற பெயரில் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தெற்கு கடற்கரையில் இந்த ஓட்டப்பந்தயம் நடந்தது.
செரீனாவுடன் ஓட விருப்பமுள்ளவர்களும், முன்னணி ஓட்டப்பந்தய வீரர்களும் இதில் பங்கேற்றனர். செரீனா வில்லியம்சுடன், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்சும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.டென்னிஸ் ஆட்டங்களில் மணிக்கணக்கில் சளைக்காமல் ஆடும் செரீனா, இந்த ஓட்டத்தில் 2வது கி.மீ. தூரத்தை கடக்கும் முன்னரே திணறினார். பின்னர் ஓட்டத்தை கைவிட்டு டாக்சியில் ஏறி பந்தயம் முடிவடையும் இடத்தை அடைந்தார். ஆனால், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 5 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி கடந்து அசத்தினார்.

No comments:
Post a Comment