ஆஸ்திரேலிய டூருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! யுவராஜ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு!! - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 22, 2015

ஆஸ்திரேலிய டூருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! யுவராஜ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு!!

ஆஸ்திரேலிய டூருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! யுவராஜ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு!!
BCCI to pick Team India for Australia tour on Saturday
டெல்லி:டெல்லி: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் கலக்கிய ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
 ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 6ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அங்கு ஆஸ்திரேலிய அணியுடன் பெர்த் நகரில் ஜன.12, பிரிஸ்பேன் நகரில் ஜன.15, மெல்போர்ன் நகரில் ஜன.17, கான்பெர்ரா நகரில் ஜன.20, சிட்னி நகரில் ஜன.23 என 5 ஒரு நாள் போட்டிகளிலும், பின்னர் ஜன.26, 29, 31 ஆகிய நாட்களில் மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய அணி மோதுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
 டெல்லியில், சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் இன்று மாலை கூடி அணியை தேர்வு செய்தனர். சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளும், 109 ரன்களும் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா, ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளும், 
109 ரன்களும் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா, 7 மாதத்துக்குப்பின் ஒருநாள் தொடரில் இடம் பெற்றார். 'டுவென்டி-20' அணியில் யுவராஜ் சிங், ஆஷிஸ் நெஹ்ரா சேர்க்கப்பபட்டனர். உலக கோப்பை முடிந்ததும் கால்முட்டி ஆபரேஷன் செய்ததால் ஓய்வு எடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் தொடருக்கான வீரர்கள் விபரம்: ஷிகர் தவாண், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, அஜிங்கியா ரஹானே, மணிஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அக்சர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கிரீத் சிங் மான், ரிஷி தவாண், பரீந்தர் சிங். 

டி20 வீரர்கள் விபரம்: ஷிகர் தவாண், ரோகித் ஷர்மா, விராத் கோலி, அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages