டெஸ்ட் போட்டிக்கு வெ.இ. முன்னுரிமை அளிக்க வேண்டும் : கிளார்க் பேட்டி - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 22, 2015

டெஸ்ட் போட்டிக்கு வெ.இ. முன்னுரிமை அளிக்க வேண்டும் : கிளார்க் பேட்டி

டெஸ்ட் போட்டிக்கு வெ.இ. முன்னுரிமை அளிக்க வேண்டும் : கிளார்க் பேட்டி 


மெல்போர்ன்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியை சந்தித்தது. மூன்றே நாட்களில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரஸ்சல் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் லீக்கில் (பிபிஎல்) விளையாடி வருகின்றனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தங்கள் தேசிய அணிக்கு விளையாடாமல், பிக் பாஸ் லீக்கில்  வீரர்கள் விளையாடி வருவது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கிளார்க் தெரிவித்துள்ளார். தேசிய அணியை விட, கிளப் அணிகளை வீரர்கள் தேர்வு செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதில் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டி20 லீக்குகள் முக்கியமானது மற்றும் பார்ப்பதற்கு அற்புதமானவைதான். ஆனால் தேசிய அணியில் விளையாடுவதை காட்டிலுமான சிறப்பு அதில் இல்லை என்றார். பணக்கார டி20 லீக் போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் கடும் சவாலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் (பாக்சிங் டே டெஸ்ட்) வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. - See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=85373#sthash.zIfDX6EB.dpuf

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages