தென் மண்டல மகளிர் கால்பந்து: புதுச்சேரி, கேரள அணிகள் வெற்றி - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 23, 2015

தென் மண்டல மகளிர் கால்பந்து: புதுச்சேரி, கேரள அணிகள் வெற்றி

தென் மண்டல மகளிர் கால்பந்து: புதுச்சேரி, கேரள அணிகள் வெற்றி



திருச்சியில் நடைபெற்று வரும் 21-வது தென் மண்டல சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் புதுச்சேரி, கர்நாடகம், கேரள அணிகள் வெற்றி பெற்றன.
 தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் ஆதரவுடன் திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரியில் கடந்த 21-ம் தேதி முதல் தென் மண்டல அளவிலான 21-வது மகளிர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில அணிகள் விளையாடி வருகின்றன.
 திங்கள்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் தமிழகத்தை 5-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் வென்று 2-வது வெற்றியை பெற்றது புதுச்சேரி. இப்போட்டியில் புதுச்சேரி வீராங்கனைகள் ஆர். சந்தியா, கே. இந்துமதி ஆகியோர் தலா 2 கோல்களையும், எஸ். பிரதீபா ஒரு கோலையும் அடித்தனர். தமிழகத்தின் எஸ். கீதாஞ்சலி 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
 மற்றொரு லீக் போட்டியில் தெலங்கானாவை 3-1 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணி வீழ்த்தியது. இதேபோல் தெலங்கானாவை 5-1 என்ற கோல் கணக்கில் கேரளம் வீழ்த்தியது. கேரளத்தின் டி. நிகிலா, சுபித்தா பூவட்டா ஆகியோர் தலா 2 கோல்களையும், கே. அதுல்யா ஒரு கோலும் அடித்தனர்.
 கடைசி லீக் போட்டியில் கர்நாடகத்தை 4-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி வென்றது. இந்துமதி, எஸ். பிரதீபா, சந்தியா, அம்சவல்லி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
 புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழகம் - தெலங்கானா, கேரளம் - கர்நாடக அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages