மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாவட்ட அளவிலான வீராங்கனைகள் தேர்வு ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, நீச்சல், கைப்பந்து, ஆக்கி, டென்னிஸ், கோ-கோ, கபடி, வாலிபால் போன்ற 9 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். ஒவ்வொரு போட்டியிலும் 2 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
மாநில அளவிலான கோ-கோ மற்றும் கபடி போட்டி வருகிற 14-ந் தேதி கரூரிலும், ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, நீச்சல் போட்டி வருகிற பிப்ரவரி மாதம் ஐதராபாத்திலும் நடக்கிறது.
No comments:
Post a Comment