சேலத்தில் மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

சேலத்தில் மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேலம் மாவட்ட பிரிவு சார்பில் 2015-16ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் தேர்வு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 70-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அறிவித்தபடி கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல், கைப்பந்து, ஆக்கி, லான் டென்னிஸ், தடகளம், இறகுபந்து, மேஜைபந்து, கபடி, கோ-கோ ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் இவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும், தேசிய அளவிலான போட்டிகள் நாளை(12-ந் தேதி) முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 17-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது என்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் தெரிவித்தார்.


அதாவது நாளை(12-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை ஜம்முவில் தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகளும், 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் கபடி, கோ-கோ, கைப்பந்து போட்டிகளும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போட்டிகளும், பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பீகார் மாநிலம் பாட்னாவில் கைப்பந்து, ஆக்கி, லான் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுகிறது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages