தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் பின் சேர்ப்பு - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் பின் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் பின் சேர்ப்புஇங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் மாதம் 26-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.

இதற்கு முன் மூன்று நாட்கள் போட்டிகள் கொண்ட இரண்டு பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா புறப்படும்போது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவன் பின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் மாதம் நடந்த டெஸ்ட் தொடரின்போது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். மேலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் முதலில் சேர்க்கப்படவில்லை. தற்போது அவரது காயம் குணமடைந்துவிட்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘‘லயன்ஸ் அணிக்காக விளையாடும்போது என்னுடைய செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நான் பந்து வீசும்போது என்னுடைய கால்பாதம் வலியின்றி நன்றாக இருந்தது’’ என்று பின் கூறினார்.

இதனால் உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுள்ள பின் இன்று அணியுடன் இணைகிறார். ஆனால், நாளை நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இடம்பெறுவாரா? என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages