இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 122 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 122 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.
 405 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி கடைசி நாளான திங்கள்கிழமை 95.2 ஓவர்களில் 282 ரன்களுக்கு சுருண்டது.
 நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 431 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்டில் 156, கேன் வில்லியம்சன் 88, கேப்டன் மெக்கல்லம் 75 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 117.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னா 84, தினேஷ் சன்டிமல் 83 ரன்கள் சேர்த்தனர்.
 நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 65.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டாம் லேத்தம் 109, கேன் வில்லியம்சன் 71 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹெராத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 282-க்கு ஆல் அவுட்: இதையடுத்து 405 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 50.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. தினேஷ் சன்டிமல் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 கடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தினேஷ் சன்டிமல்-மேத்யூஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. மேத்யூஸ் 25 ரன்கள் சேர்த்த நிலையில் வாக்னர் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, சன்டிமல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 இதையடுத்து வந்த விதாஞ்சே அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் ஸ்ரீவர்த்தனா 29, சுரங்கா லக்மல் 23 ரன்கள் சேர்த்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 95.2 ஓவர்களில் 282 ரன்களுக்கு சுருண்டது இலங்கை.
 நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், சேன்ட்னர், நீல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 மார்ட்டின் கப்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது.
துளிகள்...
 *சொந்த மண்ணில் 2012-ல் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற நியூஸிலாந்து, அதன்பிறகு விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்றதில்லை. இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் வென்றாலோ அல்லது டிரா செய்யும்பட்சத்திலோ சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் தோற்காமல் இருந்த தனது முந்தைய சாதனையை சமன் செய்யும்.
 *இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் 9 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் இரு முறை 9 கேட்சுகளைப் பிடித்தவர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவின் மார்க் பெளச்சர், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹேடின் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages