இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்குப்பிறகு ஆஸ்திரேலிய அணியில் இருந்து
தொடக்க வீரர் ரோஜர்ஸ், கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆல் ரவுண்டர் ஷேன்
வாட்சன், விக்கெட் கீப்பர் ஹாடின் ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இதனால் உஸ்மான் கவாஜாவிற்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது. சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டிலும் இரண்டு சதங்கள் அடித்து தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2-வது போட்டியின்போது அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது. அத்துடன் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மெர்போர்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே (டிசம்பர் 26) பொட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் கவாஜா பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்குள் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தனது உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் கவாஜா பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் விளையாடும் தண்டர் அணி சிட்னி சிக்சர் அணிக்கு எதிரான போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதனால் கவாஜா மெல்போர்ன் டெஸ்டில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.
‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தண்டர் அணியின் மருத்துவ அதிகாரிகளுடன் அவரது காயம் குறித்து அடிக்கடி விளக்கம் கேட்டு வருகிறது’’ என்று சிட்னி தண்டர் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment