டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: மொகாலி மைதானத்தை பார்வையிட்டு திருப்தியடைந்த ஐ.சி.சி. குழு - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: மொகாலி மைதானத்தை பார்வையிட்டு திருப்தியடைந்த ஐ.சி.சி. குழு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: மொகாலி மைதானத்தை பார்வையிட்டு திருப்தியடைந்த ஐ.சி.சி. குழுடி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பை, மொகாலி, கொல்கத்தா, தர்மசாலா உள்பட 8 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது.

பொதுவாக ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் போட்டி நடைபெறும் மைதானங்களை ஐ.சி.சி. குழு பார்வையிட்டு மைதானம், வீரர்களை அறை உள்பட அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்கும். அவர்களுக்கு மைதானம் குறித்து திருப்தியளிக்காவிடில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வார்கள். மேலும், மைதானத்தின் ஆடுகளம் தயாரிக்கும் பணியும் அவர்களிடம் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த போட்டிக்கான ஐ.சி.சி. தலைவர் டெட்லே தலைமையிலான அணியும், இந்த தொடருக்கான பி.சி.சி.ஐ.யின் இயக்குனர் எம்.வி.ஸ்ரீதர் அகியோரும் இணைந்து மொகாலி மைதானத்தை பார்வையிட்டனர். அப்போது மைதானம் சிறப்பாக இருக்கிறது என்று ஐ.சி.சி. குழு தலைவர் கூறினார். அடுத்து ஐ.சி.சி. குழு தர்மசாலா செல்கிறது.

மொகாலியில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மோதும் போட்டி மார்ச் 25-ந்தேதியும், இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டி 27-ந்தேதியும் நடக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages