புனே, ராஜ்கோட் அணிகளுக்கு வீரர்கள் இன்று தேர்வு: டோனி, அஷ்வின், ஜடேஜாவுக்கு கிராக்கி - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

புனே, ராஜ்கோட் அணிகளுக்கு வீரர்கள் இன்று தேர்வு: டோனி, அஷ்வின், ஜடேஜாவுக்கு கிராக்கி


மும்பை:

 ஐபிஎல் டி20 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே, ராஜ்கோட் அணிகளுக்கான முதல் கட்ட வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடைபெறுகிறது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் 2016 மற்றும் 2017ம் ஆண்டு சீசனில் விளையாடுவதற்காக இரண்டு புதிய அணிகளை சேர்க்க கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது. டெண்டர் விடப்பட்டதில் புனே நகரை அடிப்படையாகக் கொண்ட அணியை தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் நியூ ரைசிங் நிறுவனம் ரூ.16 கோடிக்கும், இன்டெக்ஸ் மொபைல் நிறுவனம் ராஜ்கோட் அணியை ரூ.20 கோடிக்கும் ஏலம் எடுத்தன.


இந்த அணிகளுக்கான முதல் கட்ட வீரர்கள் தேர்வு மும்பை கிரிக்கெட் சங்க கிளப் இல்லத்தில் இன்று நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சேர்ந்த வீரர்கள் புதிய அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர். இரு அணிகளும் தலா 5 வீரர்களை நேரடியாகத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வாய்ப்பு புனே அணிக்கு வழங்கப்பட்டுள்ளதால், சிஎஸ்கே கேப்டன் டோனியை அந்த அணி தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜ்கோட் அணி குறிவைக்கிறது.சிஎஸ்கே வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஷ்வின், டுவைன் பிராவோ, பிரெண்டன் மெக்கல்லம், ராயல்ஸ் வீரர்கள் ரகானே, வாட்சன், ஸ்மித் ஆகியோரை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறது. முதலாவதாக தேர்வு செய்யப்படும் வீரருக்கு ரூ.12.5 கோடி கிடைக்கும். அடுத்து தேர்வு செய்யப்படும் 4 வீரர்களுக்கும் முறையே ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி கிடைக்கும். இரண்டாம் கட்டமாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான ஏலம் பிப். 6ம் தேதி பெங்களூருவில் நடைபெறும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages