புதுடெல்லி,
5 அணிகள் இடையிலான சர்வதேச
பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3–வது கட்ட போட்டிகள்
கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று
நடப்பு சாம்பியன் இந்தியன் ஏசஸ் அணி, ஐக்கிய அரபு அமீரக ராயல்ஸ் அணியை
எதிர்கொண்டது. இதில் இந்தியன் ஏசஸ் அணியின் கையே ஓங்கியது. கலப்பு
இரட்டையரில் சானியா மிர்சா –ரோகன் போபண்ணா (6–4), பெண்கள் ஒற்றையரில்
அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (6–1), ஜாம்பவான் பிரிவில் பேப்ரிஸ் சான்டோரா (6–5),
ஆண்கள் இரட்டையரில் போபண்ணா–ரபெல் நடால் என்று அனைவரும் இந்தியன் ஏசஸ்
அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஒற்றையர்
ஆட்டத்தில் ரபெல் நடாலும் (இந்தியன் ஏசஸ்)– ரோஜர் பெடரரும் (அமீரக ராயல்ஸ்)
சந்தித்தனர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6–5 என்ற கணக்கில் பெடரரை
வீழ்த்தினார். முடிவில் 30–19 என்ற கேம் கணக்கில் இந்தியன் ஏசஸ் அணி, அமீரக
ராயல்சை எளிதில் வென்றது. 7–வது ஆட்டத்தில் ஆடிய இந்தியன்ஸ் ஏசஸ் அணி
சுவைத்த 6–வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் சிங்கப்பூர்
ஸ்லாமர்ஸ் அணி 24–22 என்ற கேம் கணக்கில் லியாண்டர் பெயஸ் தலைமையிலான
ஜப்பான் வாரியர்சை வீழ்த்தியது. 4–வது கட்ட போட்டிகள் நாளை முதல் 16–ந்தேதி
வரை துபாயில் நடக்கிறது.
No comments:
Post a Comment