ஜாமினில் வெளிவந்தார் எலானோ! - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 22, 2015

ஜாமினில் வெளிவந்தார் எலானோ!


ஜாமினில் வெளிவந்தார் எலானோ!



சென்னை எப்.சி கால்பந்து அணியின் அணித்தலைவரான எலானோ ப்ளூமர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவாவில் உள்ள படோர்டாவில் கடந்த 20ம் திகதி இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த அணியின் தலைவர் எலானோ ப்ளூமர் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியபடி சக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது கோவா அணியின் உரிமையாளர் தத்தராஜ் சல்கான்கரை அவமதித்தது மற்றும் தாக்கியதற்காக எலானோ ப்ளூமரை கோவா பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து சென்னை அணியினர் மற்றும் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் உதவியுடன் கூடுதல் அமர்வு நீதிபதி வின்சென்ட் செல்வா எலானோவுக்கு ஜாமின் வழங்கினார், இதனையடுத்து தனது சொந்த நாடான பிரேசிலுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கோவா அணியினரின் செயல்பாடுகள் வருத்தம் தருவதாகவும், எலானோ நடவடிக்கை குறித்து விசாரிக்கப்படும் எனவும் ஐஎஸ்எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages